» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி ரூ. 8,000-லிருந்து ரூ. 20,000-ஆக உயர்த்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட தவெக வேட்பாளர்களை ஆதரித்து மகாதானபுரம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் விஜய் பேசியதன் முக்கிய அம்சங்கள்: ஊழலைத் தடுக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் அட்டை போன்ற 'தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் அட்டை' வழங்கப்படும். இதன் மூலம் அரசு நலத்திட்டங்கள் லஞ்சமின்றி மக்களின் வீட்டிற்கே நேரடியாக வந்து சேரும்.
ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும். 'வெற்றித் தமிழ்நாடு சூப்பர் ஆப்' மூலம் சான்றிதழ்கள், புகார்கள் என அனைத்துச் சேவைகளும் மொபைல் வழியாகவே வழங்கப்படும். தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் தளம் மூலம் பொதுமக்கள் நேரடியாகச் சட்டமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். 5 லட்சம் கையொப்பங்கள் பெற்ற மனுக்கள் மீது பேரவையில் விவாதம் கட்டாயமாக்கப்படும்.
தமிழகத்தைச் சர்வதேச தொழில்நுட்ப மையமாக மாற்ற 'ஏ.ஐ. சிட்டி' உருவாக்கப்படும். இதற்காக இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் தவெக அரசால் அமைக்கப்படும். மதுரை, கோவை, சேலம், திருச்சியில் ஏ.ஐ. புத்தாக்க மையங்கள் மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவுப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி ரூ. 8,000-லிருந்து ரூ. 20,000-ஆக உயர்த்தப்படும். மீனவர்களுக்கான டீசல் மானியம் 3,500 லிட்டராக அதிகரிக்கப்படும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு மீட்புக்காலம் வரை ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். 'கடல்தாய் வீட்டு வசதி' திட்டத்தின் கீழ் மீனவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
"இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா அல்லது மக்களை நேசிக்கும் தவெக ஆட்சி வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்," என விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! - முதல்வர் விஜய் பேச்சு!
புதன் 13, மே 2026 12:08:15 PM (IST)

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு : ஆதரவு வாக்குகள் 144 - திமுக வெளிநடப்பு!
புதன் 13, மே 2026 11:52:09 AM (IST)

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)










