» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் கீழ ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (26). இவர் கடந்த 2019-ம் ஆண்டு புளியங்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார். அப்போது, வாசுதேவநல்லூர் கங்கை அம்மன் கோவில் மேலத் தெருவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பேருந்து பயணத்தின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15.03.2019 அன்று தேர்வு எழுதிவிட்டு திரும்பிய சிறுமியை, பாண்டி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். சங்கரன்கோவில் வழியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டி சிறுமியைக் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு: இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி பி. ராஜவேல், குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை  தண்டனை, ரூ.11,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் குட்டி (எ) மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory