» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்சியில் பங்கு என்பது குறித்து தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்: மாணிக்கம் தாகூர்
புதன் 18, பிப்ரவரி 2026 11:20:32 AM (IST)
ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சியின் தலைமையிடம் ஏற்கெனவே பேசிவிட்டேன்” என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”டிஎன்டி (பிரமலைக்கள்ளர் சமூகம் ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன். சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி பல்வேறு உரிமைகளை இழந்த இச்சமூக மக்களுக்காக சலுகை வழங்கக் கோரி மனு அளிப்பேன்.காங்கிரஸ் இன்றி திமுக அரசு அமைக்க முடியாது என தவெக நிர்வாகி நிர்மல்குமார் கூறியிருப்பது அவரது கருத்து. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன். செல்வப்பெருந்தகைக்கும், எனக்குமான பிரச்சினை என்பது அண்ணனுக்கும் தம்பிக்குமானது. இதில் பெரியதாக ஒன்றுமில்லை.
அவர் என் மீது புகார் அளிக்க டெல்லிக்குப் போவதாக வெளியாகும் தகவலில் ஒன்றுமில்லை. ஆட்சியில் பங்கு என்பதில் ராகுல் காந்தி கருத்து என்ன என்பதை நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். மாணிக்கம் தாகூர் ராஜினாமா போன்ற வதந்திகளை சில ஐடி விங் செய்கின்றன.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினரை தவறாக பார்க்கும் சங்கிகளின் பார்வை தொடர்கிறது. மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் எப்படி பெண்களை பற்றி அவதூறாக பேசி, அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார். மாவட்டத் தலைவர்களுக்கும் அந்த வியாதி ஒட்டியுள்ளது. அவர்களின் வியாதியை தீர்க்க வேண்டியது முக்கிய கடமை. காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் கட்சியில் உயர்ந்து, தற்போது ஜோதிமணி எம்.பி.யாக உள்ளார். அவரைப் பற்றி தவறான பேசிய பாஜக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் தலையிடவேண்டும். பெண்களை அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசுவது பாஜக நிர்வாகிகளுக்கு கை வந்த கலையாகிபோனது. இது பாஜக, ஆர்எஸ்எஸ் கலாச்சாரமாக மாறிவிட்டது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக இருக்க போகிறதா அல்லது வெற்றிக்காக இருக்கப் போகிறதா... தமிழகத்தின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் தமிழக முதல்வர் கூறியது போன்று, தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகம் வெற்றி பெறும்” என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)









