» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)
குலசேகரம் அருகே மருத்துவ மேல்படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, ரப்பர் விவசாயியிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த கோபகுமார் (60), ரப்பர் விவசாயி. இவரது மகன் ஆதித்யன் மருத்துவராக உள்ளார். அவர் எம்.டி. (M.D.) மேல்படிப்பு படிப்பதற்காகக் கோபகுமார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
நெல்லை மகாராஜா நகரைச் சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி மற்றும் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர் யமுனா தேவி ஆகியோர் கோபகுமாரைத் தொடர்பு கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.
இதனை நம்பிய கோபகுமார் சீனிவாசனிடம் ரூ.8 லட்சமும், யமுனா தேவியிடம் ரூ.10 லட்சமும், என மொத்தம் ரூ.18 லட்சத்தை வழங்கியுள்ளார். பணம் கொடுத்தும் மருத்துவ மேல்படிப்புக்கு இடம் வாங்கித் தரவில்லை. மேலும், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோதும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி, சீனிவாசன் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)









