» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு

சனி 29, நவம்பர் 2025 5:02:37 PM (IST)



செந்தரை ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் செந்தரை ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (29.11.2025) கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சுகாதாரத்துறையில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, கலைஞரின் வரும்முன் காப்போம் போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். 

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 02.08.2025 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமினை தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து இன்று கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட கீழ்குளம், கருங்கல், பாலப்பள்ளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் இனயம், மிடலாம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்காக செந்தரை ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நரம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட 17 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது. மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகிறதா எனவும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. 

தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் கூமார் 2200 மருத்து பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. எனவே பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

மருத்துவ முகாமில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் தினேஷ் சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர், முகாம் ஒருங்கிணைப்பாளர், துறை அலுவல


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory