» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம் நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோட்டை கருங்குளம் நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளத்துறை) சிவகுமார், முக்கிய பிரமுகர் கிரகம்பெல் முன்னிலையில் இன்று (05.12.2025) தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் நம்பியாறு அணை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று நம்பியாறு நீர் தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நம்பியாறு நீர்த்தேக்கத்தில் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதான கால்வாயின் கீழ் பாசனம் பெறும் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் 40 குளங்களின் மறைமுக பாசனப்பரப்பு நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக 05.12.2025 முதல் 31.03.2026 முடிய, நாள் ஓன்றுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் பிசான பருவ சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்.

நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு விடப்படும் நீரினால் கோட்டைக்கருங்குளம், கஸ்தூரிரெங்கபுரம், குமாரபுரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 

விவசாயிகளுக்கு பயிர் விவசாயம் செய்வதற்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு சிறப்பாக பயிர் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் வினியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) சிவகுமார், செயற்பொறியாளர்கள் (சிற்றாறு வடிநிலம்) மணிகண்டராஜன், ஆக்னஸ் ராணி, அருள் பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் மூர்த்தி உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory