» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் : லட்சக்கணக்கில் சேதம் - விவசாயிகள் வேதனை!
சனி 29, நவம்பர் 2025 4:15:15 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இலங்கை மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் டிட்வா புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் 150 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கியது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்..!!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:55:02 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய் உடன் ராகுலின் முக்கிய ஆலோசகர் திடீர் சந்திப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:50:57 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)










