» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோரணமலை முருகன் கோயிலில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

வியாழன் 18, ஏப்ரல் 2024 11:14:17 AM (IST)



தோரணமலை முருகன் கோயிலில் 20 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் சித்திரை புத்தாண்டு திருவிழா மிகச்சிறப்பாக நடந்தது. இந்த விழாவினையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது.அதன் பின் சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சப்பரத்தில் முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. விவசாயிகள் பயன்படுத்தும் கலப்பை போன்ற உபகரணங்களை பூஜை செய்து வழிப்பட்டனர். 

அதன் பின் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை கௌரவித்தனர். அதன் பின் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள சிறந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் விவசாயிகள் இந்த விருதை வழங்கினார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி, மண்புழு ஆராய்ச்சியாளர் டாக்டர் சுதாகர், திருச்செந்தூர் கோட்டாச்சியரின் உதவியாளர் கோபாலகிருஷ்ணன், 

தெற்குகாரசேரி கிராமநிர்வாக அதிகார் முனைவர் கந்தசுப்பு, பரதநாட்டிய கலைஞர் திருநங்கை பொன்னி, திருநங்கை அஞ்சலி, வில்லுபாட்டு மாதவி, முகநூல் விமர்சகர் தன்னூத்து குமரன், மூத்த பத்திரிக்கையாளர் பரமசிவன், மூலைக்கரைப்பட்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆவுடையப்ப குருக்கள், திரைப்படஇயக்குனர் கள் அயோத்தி மந்திரமூர்த்தி, பம்பர் பட இயக்குனர் செல்வக்குமார், 1947ஆகஸ்ட்15 பட இயக்குனர் பொன் குமார், ஊடகவியாளர் கோபால கிருஷ்ணன், கோயில் தரிசனம் பாடலாசிரியர் துரை நாகராஜன், வெய்க்காலிபட்டி ஆர்.எல். குமரன்,எழுத்தாளர் கடையம் பாலன், தென்காசி லைப், தளிர் அமைப்பு உள்பட 20 பேருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து தோரணமலையில் 50 ஆண்டு இறைப்பணி செய்த ஆதிநாரயணன் அய்யா நினைவு தோரணமலையான் விருது2024 வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.முன்னதாக தென்காசி சிவனடியாகர்ளின் சிவ கன வாத்தியம், ஸ்ரீலட்சுமி குபேர வருண கலச பூஜை 21 சர்ககரை பொங்கல் பானை படையல், உற்சவமூர்த்தி உள் வீதி உலா நடந்தது.

லோட்டஸ் பள்ளி மாணவ செல்வங்களின் கலை நிகழ்சச்கள், தோரணமலையான் இன்னிசை குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை, முத்துமாலைபுரம் ஆதிநாராயணன் சந்திரலீலா மாலை கட்டணமில்லா படிப்பக மாணவ செல்வங்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இரவு நூற்றுக்கணக்கான அகல் விளக்கு தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.தோணமைலையானின் இறைப்பணி பெருவள்ளல் டாக்டர் தர்மராஜ் கோவில் தரிசனம் யூ டியூப் சேனல் வழங்கும் தோணமலை பேரழகன் பாடல்களை வெளியிட்டார். பகல் முழுவதும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory