» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 10:06:07 AM (IST)

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு கோர்ட்டில் இருந்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, எச்.ராஜா மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது எச்.ராஜாதானா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில் ஆம் என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை எதிர்க்கொள்ளும்படி உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory