» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் சித்திரை பௌர்ணமி விழா குரு பூஜையுடன் தொடக்கம்

வெள்ளி 12, ஏப்ரல் 2024 6:26:14 PM (IST)



உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மன அமைதியுடன் வாழவும் வேண்டி ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஏப். 23ம் தேதி சித்திரை பௌர்ணமியன்று நடைபெறும் கலச விளக்கு வேள்வி பூஜை பணிகள் குருபூஜையுடன் தொடங்கியது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சித்திரை பௌர்ணமியன்று பகல் 12.15 மணி அளவில் மழைவளம் வேண்டியும். இயற்கை சீற்றங்கள் தணியவும், வெயிலின் தாக்கம் குறையவும், மக்கள் மன அமைதியுடன் வாழவும், உலக அமைதிக்காகவும் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அவர்கள் வகுத்து தந்த வழியில் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச, விளக்கு வேள்விபூஜை நடத்தப்படுகிறது. வேள்வியில் பங்கேற்க பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தர இருக்கின்றனர்

இந்த வேள்வி பூஜைக்கான குருபூஜை இன்று ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 4:30 மணிக்கு குருபூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் துவங்கியது. சுமார் 1000 செவ்வாடை வேள்வித் தொண்டர்கள் யாகசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த வேள்வியின் சிறப்பு அம்சமாக மேரு சக்கரம், பஞ்ச தெய்வ சக்கரம், அடிகளார் சக்கரம் போன்ற அமைப்புகளுடன் சக்கரங்கள் அமைத்து யாகம்  செய்வதற்கான பணிகள் துவங்கியது. குரு பூஜை முடிந்ததும் சாரல் மழை பெய்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். மேலும் சூலம், இரட்டை நாகம், ஒற்றை நாகம், சதுரம், ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைக்கும் பணியும் துவங்கியது.

இந்த சித்திரை பௌர்ணமி விழா திங்கள் கிழமை 22ஆம் தேதி விடியற்காலை 3.30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. காலை 4.00 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிடேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன. காலை 10.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி  வைக்கிறார்.

தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு ஆன்மிககுரு அடிகளார் அவர்களின் திருப் பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12.15  மணிக்கு சிறப்பு கலச, விளக்கு, வேள்வி பூஜை நடைபெறுகிறது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர்களான அன்பழகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்கத்தின் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வேள்வி பூஜையினை துவக்கி வைக்கிறார். பின்னர் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் உமாதேவி பூஜையில் வைக்கப்பட்ட கலச விளக்குகளை விநியோகம் செய்கிறார்.

வேள்வியை காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக இயக்கத்தின் பல்வேறு குழுவினரும். இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையிலும், துணைத்தலைவர்கள் அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் வழிகாட்டுதலுடனும்  செய்து வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மன்றங்களும், சக்திபீடங்களும் விழா பொறுப்பேற்று தஞ்சை மாவட்ட தலைவர் வாசன் தலைமையிலும், சக்திபீடங்களின் இணைச்செயலாளர் எஸ்.இராஜேந்திரன்  மற்றும் ஜெயராமன் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory