» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

5 ஆண்டுகளில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாறும் : அண்ணாமலை வாக்குறுதி!

வெள்ளி 12, ஏப்ரல் 2024 5:28:29 PM (IST)



5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மக்களவைத்தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பா.ஜ.க. வேட்பாளரும் தமிழக பா.ஜ.க. தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். அதில் கோவை தொகுதியில் 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

* காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள்.

* என்.ஐ.ஏ மற்றும் என்.சி.பி கிளை அலுவலகங்கள் செயல்படும்.

* மத்திய அரசு உதவியுடன் கோவையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.

* கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் உள்ள ஆன்மீகத்தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவையில் ஐ.ஐ.எம். கொண்டு வர வலியுறுத்துவோம்.

* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சரவணப்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சரவணப்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவை விமான நிலையத்தை உலகத்தரத்திற்கு விரிவாக்கம் செய்து சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும். மெட்ரோ திட்டப்பணிகள் விரிஅந்து முடிக்கப்படும்.

* விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்.

* நொய்யல் நதி அதன் கிளை நதியான கவுசிகா நதிகளை மீட்டெடுத்து கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.

* விசைத்தறி உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

* ஆட்டோமோட்டிவ் காரிடர் அமைக்கப்படும். கோவை டிபென்ஸ் காரிடர் செமிகண்டக்டர்களை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.

* மத்திய அரசின் 4 நவோதியா பள்ளிகள் அமைக்கப்படும்.

* ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையம், பாட்டியாலாவின் கிளை பயிற்சி மையம் கோவையில் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory