» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் ஊழலாக கருத முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

வெள்ளி 29, மார்ச் 2024 8:44:29 AM (IST)

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கோடம்பாக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தேர்தல் பத்திரங்கள் குறித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. மீது மட்டும் குற்றம் சுமத்துகிறார்கள். எதுவுவே கணக்கில் இருந்தால் அதை ஊழலில் கொண்டு வர முடியாது. தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளது. அதை ஊழலாக கருத முடியாது" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

SSHJJMar 30, 2024 - 12:32:06 PM | Posted IP 172.7*****

BJP is Orgin of Accountability of corruption...

sshjjMar 30, 2024 - 12:19:15 PM | Posted IP 172.7*****

accountability corruption

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory