» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ் தெரியாது... வேட்புமனுதாக்கலில் நாம் தமிழர் வேட்பாளர் அதிரடி!

செவ்வாய் 26, மார்ச் 2024 11:18:21 AM (IST)



வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது' என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார். இதையடுத்து ஆட்சியர் வாசிக்க, பின் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், நேற்று காலை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது கட்சியினருடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். விருதுநகர் ஆட்சியரிடம் வேட்பாளர் கவுசிக் வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது அவரிடம் உறுதிமொழிப் படிவம் வழங்க அதை வாசிக்குமாறு ஆட்சியர் கூறினார்.

அப்போது, தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்று கூறினார். அதையடுத்து, உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வாசிக்க, அதனை வேட்பாளர் கவுசிக் பின்தொடர்ந்து கூறி உறுதிமொழியை ஏற்றார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா என கட்சியினரிடம் கேட்டபோது, மருத்துவர் கவுசிக்கின் பெற்றோர் வட மாநிலத்தில் வசிக்கின்றனர். கவுசிக் அங்கு படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. பேச மட்டுமே தெரியும், என்று கூறினர்.


மக்கள் கருத்து

தி.அ .தாமஸ்Mar 26, 2024 - 04:23:52 PM | Posted IP 162.1*****

இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லையும்மா அலையனும்

தமிழ்தமிழ்Mar 26, 2024 - 03:30:31 PM | Posted IP 162.1*****

இது பெரிய கோமாளி கட்சி. இந்த செபாஸ்டியன் சைமன் சூப்பர் கோமாளி , இவரை நம்பி தம்பிகள் எப்படி தேர்தலில் நிற்கிறார்கள்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory