» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி – திப்ருகர் வாரத்துக்கு 3 நாள் ரயிலை மதுரை சென்னை வழியாக இயக்க கோரிக்கை

திங்கள் 11, மார்ச் 2024 8:08:47 PM (IST)

கன்னியாகுமரி – திப்ருகர் வாரத்துக்கு மூன்று நாள் ரயிலை மதுரை சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கன்னியாகுமரிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ருகர் என்ற இடத்துக்கு 2011-ம் ஆண்டு ரயில் பட்ஜெட்டில் வாராந்திர ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே  அதிக தூரம் அதாவது 4273 கி.மீ இயக்கப்படும் ரயில் ஆகும். இந்த ரயில் முதலில் கொச்சுவேலியிருந்து எர்ணாகுளம் வழியாக திப்ருகருக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு பின்னர் புதிய நிரந்திர ரயிலாக இயக்கலாம் என்று ரயில் பட்ஜெட்டின் போது திட்டகருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படும் என்றும் வேறு புதிய ரயில்கள் கொச்சுவேலியிருந்து கேரளா பயணிகளுக்கு இயக்க முடியாமல் இந்த ரயில் பெட்டியால் பிரச்சனை வரும் என்று அறிந்த திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படுகிறது என்று தள்ளி விட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ரயில்வே வரியம் இந்த கன்னியாகுமரி - திப்ரூகர் வாராந்திர ரயிலை வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்துக்கு நான்கு நாட்கள் ரயிலாக இயங்கி வருகின்றது.

இந்த ரயில் பற்றி குமரி மாவட்ட மக்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. குமரி மாவட்ட பயணிகள் மாலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில்  இருந்து சென்னை செல்ல கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணம் செய்ய வேண்டி நடைமேடையில் நிற்கும் போது ஓரு ரயில் முழு ரயில் அளைத்து பெட்டிகளும் காலியாக அதன் ஜன்னல் கதவுக்ள முழுவதும் மூடி கொண்டு  வந்து நிற்பதை பார்த்திராவர்களே இருக்க முடியாது. 

ஒருசில பயணிகள் இந்த ரயில்தான் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று ஏறி ஏமாந்தவர்களும் உண்டு. நமது மாவட்ட மக்கள் சென்னை செல்ல பயணசீட்டு கிடைக்காமல் இருக்க முழு ரயிலும் காலியான ஏன் இந்த ரயில் இவ்வாறு இயக்கப்படுகின்றது என்று அனைவரது மனதிலும் கேள்வி இயங்கையாகவே எழும்புகின்றது

தினசரி ரயிலாக மாற்றம்:

தற்போது வாரத்துக்கு நான்கு நாட்கள் செல்லும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்ய ரயில்வேதுறை திட்டமிட்டு அதற்கான பணிகளை விரைவாக செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த ரயில் தினசரி இயக்குவதற்க தேவையான காலி பெட்டிகள் நாகர்கோவில் வந்து விட்டது. பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகம்  இல்லை.

மதுரை சென்னை வழியாக இயக்க கோரிக்கை:

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்புபாதை இருவழிபாதையாக ஒரு மாதத்துக்குள் மாற்றம் பெற்றுவிடும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த கன்னியாகுமரி – திப்ருகர் இயக்கப்படும் வாரத்துக்கு மூன்று நாள் சேவையை திருநெல்வேலி, மதுரை, திருச்சி , விழுப்புரம் சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. 

இந்த ரயிலை திருநெல்வேலி, மதுரை,திருச்சி, சென்னை வழியாக இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ரயில்சேவை கிடைக்கும். இவ்வாறு சென்னை வழியாக இயக்கும் பட்சத்தில் சுமார் 250 கி.மீக்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயணநேரத்தில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம். 

இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல பகல்நேர ரயில் சேவையும் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவையும் கிடைக்கும். தற்போது  சென்னையை தவிர தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல எந்த ஒரு நேரடி  ரயில் சேவையும் கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

தினசரி ரயில்: தென்மாவட்டங்களிலிருந்து தமிழகம் வழியாக பயணம் செய்ய 1000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ஒரு தினசரி ரயில் கூட இதுவரை மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களிலிருந்து புறப்படும் படியாகவோ அல்லது இந்த கோட்ட எல்லைக்குள் இயங்கும் படியாகவோ ரயில்வேதுறையால் அறிவித்து இயக்கப்படவில்லை. திருநெல்வேலி, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலிருந்து கூட் 1000 கி.மீக்கு மேல் பயணம் ஒரு தினசரி ரயில் இதுவரை இல்லை. இது வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது என்ற கூற்றுக்கு ஏற்ப வேண்டும்என்றே தென்மாவட்டங்களை புறக்கணிப்பதாகவே உள்ளது என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory