» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஃபேஸ்புக் முடக்கம்: விஜய் படம் பதிவேற்றம்!

திங்கள் 11, மார்ச் 2024 5:03:34 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு,  விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி பதிப்பு பதிவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தை சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர். இதில் பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவுப்புகளோடு, விழிப்புணர்வு பதிவுகள், ஆசிரியர்களின் பேச்சுகள், வழிகாட்டுதல்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நேற்று முதல் பள்ளிக் கல்வித் துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா காட்சிகள் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி பதிப்பு வீடியோவாக பள்ளிக் கல்வித் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory