» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

புதன் 7, டிசம்பர் 2022 5:14:49 PM (IST)

திற்பரப்பு அருவியில் இன்று 2-வது நாளாக குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிபாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்று மாவட்டம் முழுவதும் மழை குறைந்திருந்த நிலையில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது.

பேச்சிபாறை, பெருஞ்சாணி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் சாரல் மழை பெய்தது. புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 788 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1024 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.10 அடியாக உள்ளது. அணைக்கு 448 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.40 அடியாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory