» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகை மீனா கணவர் மறைவு : திரைப்பிரபலங்கள் இறுதிஅஞ்சலி
புதன் 29, ஜூன் 2022 5:35:29 PM (IST)
பிரபல திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(48) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மீனா கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியின் மகள் நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில், கொரோனா பக்கவிளைவுக்கு ஆளான வித்தியாசாகர், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று(ஜூன் 28) இரவு உயிரிழந்தார்.
மீனாவின் கணவர் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் சென்னையில் உள்ள மீனாவின் சைதாப்பேட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபுதேவா, ரம்பா, விஜயகுமார், சேரன், மன்சூர் அலிகான், பழம்பெரும் நடிகை லட்சுமி, சங்கீதா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் வித்யாசாகரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து மதியத்திற்கு மேல் வித்யாசாகரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் வங்கி கொள்ளை வழக்கில் 5பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:13:12 AM (IST)

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல்: அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 10:55:26 AM (IST)

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது : பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:36:44 AM (IST)

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை: அமைச்சர் திட்டவட்டம்...!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 5:28:48 PM (IST)

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:33:04 AM (IST)

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:28:53 AM (IST)
