» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்

செவ்வாய் 2, மார்ச் 2021 4:37:30 PM (IST)

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ஹேமமாலினி 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய நடிகர்- நடிகைகளை களம் இறக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. கரோனா காலகட்டத்தின் போது இந்தி நடிகர் சோனிசூட் பலருக்கு உதவி செய்து பிரபலமானார். அவர் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அனில் கபூர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான் ஆகியோர் மற்ற மாநிலங்களில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலினி தற்போது பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். இவர் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். 4 நாட்கள் தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்கிறார். தேர்தல் கூட்டங்களில் தமிழிலேயே பேசி பிரசாரம் செய்ய ஹேமமாலினி முடிவு செய்துள்ளார்.


மக்கள் கருத்து

என்ன பிழைப்புMar 3, 2021 - 09:59:03 AM | Posted IP 162.1*****

கூத்தாடிகளை.. குசுப்பூ , ரசனி, கொமல் ,... போன்றவர்களை .. வைத்து பிழைப்பு நடத்தும் பிஜேபி . கேவலம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes

Thoothukudi Business Directory