» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மார்ச் 6,7-ல் நேர்காணல் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 11:44:34 AM (IST)
வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் & கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் மார்ச் 5-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது. விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வை நடத்த உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:49:55 PM (IST)

தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை : உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 19, ஏப்ரல் 2021 4:13:01 PM (IST)

கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு: மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு!
திங்கள் 19, ஏப்ரல் 2021 3:34:35 PM (IST)

முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 19, ஏப்ரல் 2021 12:32:22 PM (IST)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதி
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:15:17 AM (IST)

மதுக்கடைகளுக்கு இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி : தமிழக அரசு
திங்கள் 19, ஏப்ரல் 2021 11:11:21 AM (IST)
