» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளி 29, மே 2020 12:24:33 PM (IST)

கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கூறியதாவது; "தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 10,548 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

தமிழகத்தில் இதுவரை 4,55,216 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே கரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம். மருத்துவப் பணியாளர்கள், நர்சுகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே எண்ணிக்கையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். உலகம் முழுவதும் பல வல்லரசு நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

பெல்ஜியம் நாட்டில் இறப்பு விகிதம் 16 சதவீதமாக உள்ளது, அதுவே பிரான்ஸ் நாட்டில் 15 சதவீதமாக இருக்கிறது. இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் இறப்பு விகிதம் 14 சதவீதமாக உள்ளது. அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள அமெரிக்காவில் இறப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் இறப்பு விகிதம் மிக குறைந்த அளவில் 0.7 சதவீதமாக உள்ளது.

மூன்று மாதங்களாக கடினமாக உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், படுக்கை வசதிகள், நிதி உதவி என அனைத்தையும் தமிழக அரசு செய்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக அரசு தெரிவிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனத்துடன் பின்பற்ற வேண்டும். மருத்துவர்களின் உழைப்பு, அரசின் நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் விட பொது மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கரோனாவில் இருந்து நாம் விரைவில் மீண்டு வர முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory