» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சனி 23, மே 2020 12:16:32 PM (IST)

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் வருத்தம் தெரிவித்தார்.  

அதேநேரத்தில் நீதிபதிகள், பட்டியலின் மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூன்று மாதங்களுக்கு பின்னர் தற்போது காவலர்கள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory