» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக சட்டப் பேரவை மார்ச் 9-ல் கூடுகிறது: மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது

புதன் 26, பிப்ரவரி 2020 12:24:06 PM (IST)

துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப் பேரவை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அப்போது துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை என 20-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, மார்ச் 9-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory