» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் : ஜெ.தீபா அறிவிப்பு

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 5:57:11 PM (IST)

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான தீபா ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தார். ஆனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார். சில தினங்களிலேயே அவரின் கணவர் மாதவனும் போட்டியாக ஓர் அமைப்பைத் தொடங்கினார். இவர்களின் அரசியல் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின. குறிப்பாக போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் தீபாவும், அவரது சகோதரர் தீபக்கும் சண்டையிட்டுக் கொண்ட பிறகு தீபாவின் அரசியல் பாணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாதவனுக்கும் - தீபாவுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் ஊடகங்களில் செய்தியாகின. இந்நிலையில், தீபா, மாதவனின் அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் பின்னர் கட்சி குறித்த எந்த சலசலப்பும் செய்தியும் இல்லாது இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் குடும்பத்தைக் கவனிக்க இருப்பதால் தீபா பேரவையைக் கலைக்க இருப்பதாக அறிவித்தார். அப்போதே அதிமுகவுடன் இணைப்பா என்ற கேள்விகள் எழுப்பின. இந்நிலையில், இன்று அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

samiAug 20, 2019 - 10:00:15 AM | Posted IP 108.1*****

லட்சோப லட்சம் தீபா பேரவை வாக்குகள் கிடைச்சாச்சு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes
Thoothukudi Business Directory