» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திடீரென நீல நிறமாக மாறிய கடல்... திருவான்மியூர் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 12:52:08 PM (IST)



திருவான்மியூரில் கடல் திடீரென நீலநிறமாக மாறியதாக தகவல் பரவியதால் நேற்றிரவு கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம், ஆகிய சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த பலர் இந்தபகுதிகளை நோக்கி நள்ளிரவிலும் திரண்டனர். குறிப்பாக திருவான்மியூர் கடற்கரையில் பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

திருவான்மியூர் மட்டுமின்றி ஈஞ்சம்பாக்கம், பெசண்ட் நகர் போன்ற பகுதிகளிலும் கடற்கரையில் மக்கள் குவிந்தனர். மேலும் தங்களது மொபைல் மற்றும் கேமராக்களில் கடல் அலைகளை புகைப்படம் எடுத்து அதனை தங்கள் நண்பர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்களில் ஒருவர் கூறியபோது, திடீரென கடல் நீலம் மற்றும் மஞ்சள் நிறமாக மாறுவது உலகின் பல இடங்களில் நடைபெறும் ஒன்றுதான். தமிழ்நாட்டிற்கு இது புதியதாக தெரிகிறது. கடல் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் காரணமாக இம்மாதிரி நிறம் மாறும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications





Thoothukudi Business Directory