» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தங்கம் தருவதாக ஆசைகாட்டி கடத்தி வரப்பட்டவர் மீட்பு : சினிமாவை மிஞ்சி நடைபெற்ற சம்பவம்

புதன் 17, ஜூலை 2019 11:55:10 AM (IST)

சுரண்டை அருகே சினிமாவை மிஞ்சி நடைபெற்ற சம்பவம் பாதி விலையில் தங்கம் தருவதாக கடத்தி வரப்பட்ட ஆந்திராவை சேர்ந்தவர் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம்,தம்பலாம்பள்ளி மண்டலம் கொத்தகோட்டாவை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி மகன் ராமன்ஜோல் ரெட்டி(28).திருமணமாகாதவர் இவர் பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் பெங்களூருரில் வைத்து பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். செல்வக்குமார் சென்னைக்கு வந்து வேலை பார்த்த போதும் செல்வகுமார் ராமன்ஜோல் ரெட்டியுடன் செல்போனில் அடிக்கடி பேசியும் நேரில் சந்தித்தும் வந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு செல்வகுமார் சென்னை பிலிம் இன்ஸ்டூட்டில் வேலை பார்ப்பதாகவும் அடிக்கடி சென்னை ஏர்போர்ட் சென்றதால் அங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மூலம்  ரூ.30 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு தங்கம் உள்ளதாகவும் அதனை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளான். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ராமன்ஜோல் ரெட்டிய கூறியும் முடிந்த அளவு பணம் தயார் செய்து விட்டு வருமாறு கூறியுள்ளான். 

இதை நம்பிய ராமன்ஜோல் ரெட்டி கடந்த 13ம் தேதி காரில் சென்னை வந்து ஏர்போர்ட் அருகில் நின்று செல்வகுமாருக்கு போன் செய்துள்ளார். அப்போது செல்வகுமார் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் வந்து ராமன்ஜோல் ரெட்டி காரில் ஏறி ரெட்டி முகத்தில் திடீரென பொடி தெளித்து கடத்தி வந்து.  ஒரு குடோனில் அடைத்து வைத்து ரெட்டியிடம் இருந்து பணம் 23 ஆயிரம்,13 கிராம் செயின், மூன்று மோதிரம், விலையுயர்ந்த இரண்டு செல் போன்களை பறித்து கொண்டனர்.

மேலும் ஏ.டி.எம்.கார்டு போன்றவற்றை அடித்து உதைத்து பிடுங்கி உள்ளனர்.மேலும் அவரது சகோதரருக்கு போன் செய்து ரூ. 30 லட்சம் கேட்டுள்ளனர். அவர் தயார் செய்த ரூ. 5 லட்சம் பணம் அனுப்புமாறு கூறியதாகவும்  அவர் 1 லட்சம் அனுப்ப அதனை ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் செய்த பின்பு காரில் 8 பேர் சேர்ந்து ராமன்ஜோல் ரெட்டியை கடத்தி நெல்லை மாவட்டத்திற்கு  கொண்டு வரும்போது  சுரண்டை அருகில் உள்ள சேர்ந்தமரத்தில் டீ குடிக்க 7 பேரும் இறங்கி உள்ளனர். 

முத்துக்குமார் மட்டும் காரில் பாதுகாப்புக்கு இருந்துள்ளனர். அப்போது சுதாரித்த ராமன்ஜோல் ரெட்டி காப்பாற்றுமாறு சத்தம்போட பொது மக்கள் கூடியதால் முத்துகுமார் மற்றும் வசந்தகுமார் தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த சேர்ந்தமரம் போலீசார் ராமன்ஜோல் ரெட்டியை காப்பாற்றி விசாரணை நடத்தி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்பு ராமன்ஜோல் ரெட்டி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆட்கொண்டார்குளத்தை சேர்ந்த குருசாமி மகன் வசந்தகுமார்(22) மற்றும் சங்கரன்கோவில் அருகில் உள்ள செந்தட்டியை சேர்ந்த வேலுசாமி மகன் முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பிய 6 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதே போல வேறு யாரையும் கடத்தி பணம் பறித்திருக்கிறார்களா  பின்னனி என்ன? பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் சேர்ந்தமரம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory