» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனை: கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்ற 2 இளைஞர்கள் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:34:59 AM (IST)
கோவில்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களைக் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த துணை மின்நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களைக் காவல் துறையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த 2பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தனர். இவ்விசாரணையில், அவர்கள் செட்டிகுறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கன்னிராஜ் (22) மற்றும் கோவில்பட்டி இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (20) என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு போட்டுக் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








