» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!

ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

fishfire34i.jpg

தூத்துக்குடி அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலானது. படகிலிருந்த மீனவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த ஜூலை 24-ஆம் தேதி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். நேற்று காலை, தருவைகுளத்தில் இருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகில் சமையல் செய்யும் பணியின் போது எதிர்பாராதவிதமாகக் கோளாறு ஏற்பட்டுத் தீப்பிடித்தது.

தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியதால், விசைப்படகு முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்தும், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசைப்படகின் உதவியோடும் தப்பித்தனர். மற்றொரு படகின் மூலம் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பத்திரமாகக் கரை திரும்பினர். நடுக்கடலில் விசைப்படகு எரிந்து சாம்பலான சம்பவம் தருவைகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory