» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!

புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ஓடும் அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பேருந்து மூலைக்கரைப்பட்டி அருகே வந்த போது, அதில் பயணம் செய்த 21 வயது இளம் பெண் ஒருவருக்குப் பேருந்து நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக நடத்துநரை எச்சரித்தார். தொடர்ந்து, பேருந்து மூலைக்கரைப்பட்டியில் வந்து நின்ற போது, அங்கேயே இறங்கிய அப்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory