» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 9, ஜூன் 2026 3:18:01 PM (IST)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics), உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு (Slimming &Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள். மேலும் இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.20,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








