» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெள்ளி 5, ஜூன் 2026 8:34:27 AM (IST)
தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் மலிந்துள்ளதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், மாநிலம் தழுவிய அளவில் நேற்று (ஜூன் 4) ஒரே நாளில் 46 முக்கியச் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 37 லட்சத்து 75 ஆயிரத்து 650 ரொக்கப் பணம் ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்கள், அந்தந்த மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து நேற்று தமிழகத்தின் சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனையை நிகழ்த்தினர். அலுவலகங்களின் நுழைவு வாயில்களைப் பூட்டி, ஆவண எழுத்தாளர்கள் மற்றும் புரோக்கர்கள் யாரும் தப்பிச் செல்லாதவாறு கறாரான கட்டுப்பாடுகளை விதித்துப் போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
அதிகப்படியாகப் பணம் சிக்கிய முக்கிய இடங்கள்:
இந்த மெகா சோதனையில் திருப்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூபாய் 3.22 லட்சமும், சேலம் கிழக்கு இணை-1 அலுவலகத்தில் ரூபாய் 3.18 லட்சமும், திருப்பூர் பொங்கலூர் அலுவலகத்தில் ரூபாய் 2.53 லட்சமும், சென்னை விருகம்பாக்கம் அலுவலகத்தில் ரூபாய் 2.07 லட்சமும் மற்றும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அலுவலகத்தில் ரூபாய் 2 லட்சமும் கணக்கில் காட்டப்படாத நிலையில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









