» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 4பேர் கைது 1 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்!

வெள்ளி 5, ஜூன் 2026 8:11:45 AM (IST)



தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 4 வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சா மற்றும்  2 பைக்குகள் பறிமுதல் செய்ய்பபட்டது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டகோபுரம் பகுதியில் நேற்று காவல் ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 வாலிபர்கள், போலீசாரின் தணிக்கையைக் கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டுத் தப்பியோட முயன்றனர்.

சந்தேகமடைந்த போலீசார், அந்த 4 பேரையும் தங்கு தடையின்றிச் சுற்றிலும் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் கொண்டு வந்த வாகனங்களைச் சோதனையிட்ட போது, அதில் விற்பனைக்காகப் பொட்டலங்களாகக் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் பிடியில் சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜ புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேச புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (20), எஸ்.எஸ். மாணிக்கபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (22) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த மாயகணபதி (24) என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் அருளப்பன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தார். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள், சட்டவிரோத கஞ்சா விற்பனை மூலம் வசம் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூபாய் 8,000 மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.100 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory