» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஜெபமாலை பவனி!
சனி 30, மே 2026 8:23:25 PM (IST)

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில், தேவமாதாவின் வணக்க மாதத்தையொட்டி மரியாயின் இயக்கத்தின் 35-ஆவது ஆண்டு விழா மற்றும் ஜெபமாலை பவனி நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலய வளாகத்திலிருந்து சிறப்புப் பிரார்த்தனையுடன் இந்த ஜெபமாலை பவனி தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட பவனியானது, ஆண்டுதோறும் அன்னை பனிமய மாதாவின் தங்கத்தேர் வலம் வரும் முக்கிய ரத வீதிகள் வழியாகப் பிரம்மாண்டமாக வலம் வந்தது.
உலக சமாதானம் வேண்டியும், இயேசு மற்றும் மரியாளின் திரு இருதயங்களுக்கு எதிராகச் செய்யப்படும் நிந்தனைகளுக்குப் பரிகாரமாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் சிறந்து செழிக்கவும் வேண்டி இந்த விசேஷப் பவனி நடத்தப்பட்டது. பவனியில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, பக்திப் பாடல்களைப் பாடியும் ஜெபமாலை செபித்தும் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த பவனி விழாவில் மரியாயின் இயக்கத்தினர், தூய பனிமய மாதா பேராலயப் பங்கு மக்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க இறைமக்கள், அருள் சகோதரர்கள் மற்றும் அருள் சகோதரிகள் எனத் திரளானோர் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான அனைத்து சிறப்பான ஏற்பாடுகளையும் பனிமய மாதா பேராலயப் பங்குத்தந்தை ஜான் செல்வம் மற்றும் மரியாயின் இயக்க நிர்வாகிகள் இணைந்து ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









