» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குப்பைக்காடாக தூத்துக்குடி தாலுகா அலுவலகம்: பாட்டில்கள், குப்பைகள் தேங்கி அவல நிலை!
சனி 30, மே 2026 5:43:21 PM (IST)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் இயங்கி வரும் தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் குப்பைகளும், மது பாட்டில்களும் சிதறிக் கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்திற்குத் தினந்தோறும் சான்றிதழ்கள், நில வருவாய் விவகாரங்கள் மற்றும் அரசு உதவிகளைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு அலுவலக வளாகம் முழுவதும் தற்போது போதிய பராமரிப்பின்றி குப்பைக் கூளமாகக் காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த அலுவலகப் பகுதியின் ஆங்காங்கே காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்பளர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வீசப்பட்டு அசுத்தமாகக் கிடக்கின்றன. நள்ளிரவு நேரங்களில் இப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சத்தைப் பொதுமக்களிடையே இது ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பல்வேறு வழக்குகளில் காவல் நிலையங்களால் கைப்பற்றப்படும் பழைய சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இந்த தாலுகா அலுவலக வளாகத்திற்குள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதியில் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதோடு மட்டுமன்றி, அலுவலகக் கட்டிடங்களைச் சுற்றிலும் வேலித்தருவை மரங்கள் மற்றும் முட்புதர்கள் ஆங்காங்கே செழித்து முளைத்து வளர்ந்துள்ளதால், வளாகத்தின் தூய்மை முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தூய்மைப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், மாவட்டத்தின் முக்கிய அரசு அலுவலகமே இவ்வாறு அவல நிலையில் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி தாலுகா அலுவலக வளாகத்தை உடனடியாகச் சுத்தப்படுத்தவும், முட்புதர்களை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









