» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா
சனி 30, மே 2026 4:51:53 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயபாலன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
அலுவலக கட்டிடத்தை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில் பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,கல்லூரி பொருளாளர் எஸ்.எம் கண்ணன், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன், சரவணக்குமார், தங்கமணி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர் விஜயகோபாலன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









