» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் : பேராசிரியர் எபினேசர் ஜோயல் குமார் நியமனம்

சனி 30, மே 2026 4:32:30 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக சென்னை அரசு பொது மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமாருக்குத் தகுதியின் அடிப்படையில் வழக்கமான பணி உயர்வு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாகப் பணிபுரிந்து வந்த டாக்டர் ஜி.சிவக்குமார் அண்மையில் தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு, தற்போது டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார்.

புதிய டீன் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் விரைவில் தூத்துக்குடிக்கு வந்து முறைப்படி தனது புதிய பொறுப்பினை ஏற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory