» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் உங்களுக்கு ஏன் பதற்றம்? அனிதாவிற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

சனி 30, மே 2026 3:25:44 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முறைகேடு செய்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களுக்கு ஏன் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது? என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் கண்டன அறிக்கை: திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "புகழ்பெற்ற திருச்செந்தூர் கோயிலில் புதியதாகப் பொறுப்பேற்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திடீர் ஆய்வு என்ற பெயரில் காலம் காலமாக பக்தர்களுக்குச் சேவை செய்து வரும் பாரம்பரியமிக்க திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளார்.

இவர்கள் பல நூற்றாண்டுகளாக மரபு வழியாகப் பக்தர்களுக்குச் சுவாமி தரிசன உதவியைச் செய்து வருகின்றனர். அர்ச்சகர்களை இழிவுபடுத்தியதோடு கோயிலின் புகழைக் கெடுத்த அமைச்சர் ரமேஷுக்கு எனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

"சாதிப் பெயர் போடும் வழக்கம் எனக்கு இல்லை" - அமைச்சர் ரமேஷ் பதிலடி:

அனிதா ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பதாவது:     "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடையாது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் எங்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை; அப்படிச் செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் சொல்லவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு எதற்காகத் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்று தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகளை விரைவில் வெளிக்கொணர்வேன். அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

அனிதா அவர்களேJun 2, 2026 - 10:21:47 AM | Posted IP 162.1*****

நம் மக்கள் எல்லாம் TVK பக்கம் இருக்கோம். உங்க வேலையை பார்த்துட்டு போகவும்.

தமிழன்மே 30, 2026 - 07:53:52 PM | Posted IP 104.2*****

பத்து வருடத்திற்கு மேலாக MLA. திருச்செந்தூரில் இருந்தும் ஒரு அடிப்படை வசதியை கூட செய்து கொடுக்கவில்லை. அனிதா வெற்றிபெற்றது அரசியலின் சாபக்கேடு. தன்னுடைய துறையில் எல்லா இடத்திலும் ஆய்வு செய்ய ஒரு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு என்பது கூட தெரியாதா.நல்லவேளை திமுக மீண்டும்ஆட்சிக்கு வரவில்லை வந்தால் திருச்செந்தூர் கோவிலை விற்று விடுவார்கள்.

Siva Sriமே 30, 2026 - 04:46:26 PM | Posted IP 172.7*****

என் அப்பன் வடிவேலன் பார்த்து கொள்வார்.குற்றம் புரிபவர்களை எப்படி திருத்துவது.மீண்டும் ஏழைகளின் பணம் சுரண்டப்படவேண்டுமா.இடி விழும் சண்முகா விரைவில் காட்டிக்கொடுப்பாய்.

Siva Sriமே 30, 2026 - 04:46:22 PM | Posted IP 172.7*****

என் அப்பன் வடிவேலன் பார்த்து கொள்வார்.குற்றம் புரிபவர்களை எப்படி திருத்துவது.மீண்டும் ஏழைகளின் பணம் சுரண்டப்படவேண்டுமா.இடி விழும் சண்முகா விரைவில் காட்டிக்கொடுப்பாய்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory