» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஜூன் 6, 7 தேதிகளில் இலவசப் பயிற்சி!

சனி 30, மே 2026 12:42:21 PM (IST)

தூத்துக்குடியில் தீ விபத்துக்கள் குறித்தும், அதனை அணைக்கும் முறைகள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான இரண்டு நாள் இலவசப் பயிற்சிகள் ஜூன் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கருணாகரன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் வந்து கலந்துகொள்ளும் வகையில் இரண்டு வேலைகளாக இந்த இலவசப் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. இதன்படி காலை அமர்வு முற்பகல் 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை அமர்வு பிற்பகல் 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்புகளில் தீ விபத்துக்களைத் தடுப்பது எப்படி, விபத்து ஏற்படும் போது உடனடியாகச் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்துத் தீயணைப்பு வீரர்களால் நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த இலவசப் பயிற்சியில் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தீயணைப்புத் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory