» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி அருகே கஞ்சா விற்ற 2 இளைஞர்கள் கைது!

சனி 30, மே 2026 8:50:09 AM (IST)

ஆறுமுகநேரியில், பள்ளி மைதானம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், அப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் இன்னும் குறையவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஆறுமுகநேரி எஸ்பி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீஸார் பேயன்விளை புதூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் பின்புற மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். ரோந்து வந்த போலீஸாரைக் கண்டதும் அந்த இருவரும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார், அந்த வாலிபர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த பையைத் தீவிர சோதனை செய்தபோது, அதற்குள் 450 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கஞ்சாவை போலீஸார் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர்களிடம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், ஒருவர் காயல்பட்டினம் கீழநயினார் தெருவைச் சேர்ந்த அப்துல்லா ஷாகிப் மகன் அபூபக்கர் சித்திக் (21) என்பதும், இவர் தற்போது பேயன்விளையில் வசித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் பேயன்விளை பாஸ் நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வகுமார் (22) என்பதும் கண்டறியப்பட்டது.

தாங்கள் இருவரும் இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை அவர்கள் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory