» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் அடிபட்டு மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு!

சனி 30, மே 2026 8:29:22 AM (IST)

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மீனாட்சி நகர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று காலையில் மூதாட்டி ஒருவர் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த மூதாட்டி தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள ஆவுடையாபுரம் பகுதியைச் சேர்ந்த மலைசாமி என்பவரின் மனைவி மாடத்தி (60) என்பது கண்டறியப்பட்டது.

மாடத்தி கோவில்பட்டி பகுதிக்கு எதற்காக வந்தார்? ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory