» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு வைபவம் திருமண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் கடந்த 16 ந் தேதி தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 13 வது பெருமன்ற கூட்டத்தில் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் மோசஸ் ஜெபராஜ் திருமண்டல உபதலைவராகவும், குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ் குருத்துவச் செயலராகவும், அணித் தலைவர் எஸ்.டி.கே. ராஜன் 'லே' செயலராகவும், டி.கே.எம். ஜான்சன் பொருளாளராகவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து திருமண்டல புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு வைபவம் நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள திருமண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டி வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து குருத்துவ செயலர் குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ், உபதலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள்.பின்னர் நிதி ஆலோசகர் அன்பர்தாஸ் பொருளாளர் டி.கே.எம். ஜான்சன் டேவிட்டிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந் நிகழ்ச்சியில் திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஆடிட்டர் ஜெபச்சந்திரன், மோகன் அருமைநாயகம், குணசீலன், சி.த. செல்லப்பாண்டியன், இரா. ஹென்றி, தேவராஜன், ஜெபர்சன், சாயர்புரம் ஜெய்கர், சுபாஷ், உட்பட திருமண்டல பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக திருமண்டல பொருளாளர் டி.கே.எம். ஜான்சன் டேவிட் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









