» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!

புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST)



உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார். 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் சாத்தான்குளம் வட்டம்,முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெற்ற கால்நடை வளர்ப்போருக்கான பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று 18.2.26 குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும், முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்தினை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.

பின்னர் பெரியதாழை ஊராட்சியில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதலத்தினை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று 18.2.26 பார்வையிட்டார். ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory