» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு!

புதன் 18, பிப்ரவரி 2026 3:14:39 PM (IST)



தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

"நாளை நமதே, தமிழ்நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த சக்தி கேந்திர தெருமுனை கூட்டத்திற்கு, சக்தி கேந்திர பொறுப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் காட்டுராஜா முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் மற்றும் பொதுமக்களுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் சேது ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, ஓபிசி பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் அருணாச்சலம். அதிமுக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பிரியா, மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி. அமமுக நிர்வாகிகள் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் செல்வி நேதாஜி, ஒன்றிய செயலாளர் சேகர், ஜான்பாண்டியன் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory