» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கள்ளத்தி கிணறு கிராமம் ஆர்சி கோவில் தெருவில் வசிப்பவர் அமல்ராஜ். இவரது மனைவி புஷ்பம் (73). இவர் வயல் வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








