» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக சார்பில் மே தின விழா: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:40:54 AM (IST)

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தொழிலாளரணி சார்பில் மே தினத்தை முன்னிட்டு நாளை தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : வருடம் முழுவதும் உழைக்கும் தொழிலாள தோழர்களை கௌரவிக்கும் விதமாக மே 1 ந் தேதி தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.கழக ஆட்சியில் இருக்கும் காலத்தில் எல்லாம் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது.

குறிப்பாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தான் மே 1 ந் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுத்தார். மேலும் அவருடைய காலத்தில்தான் பல்வேறு தொழில் செய்து வரும் உடல் உழைப்புத் தொழிலாளர்களின் நலன் காத்திட 32 நல வாரியங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

அவரது வழியில் நல்லாட்சி செய்து வரும் திராவிட மாடல் அரசர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர் நலவாரியங்களில் நிலுவையில் இருந்த அத்தனை விண்ணப்பங்களுக்கும் நலதிட்ட உதவிகள் வழங்கினார். மேலும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியம் புத்துயிர் பெற்றது. 

உப்பள தொழிலாளர்களுக்கு தனியாக ஒரு நலவாரியம் அமைக்கப்பட்டு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5000 அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக வீடு கட்டி கொடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இப்படி தொழிலாளர்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி அதை வருகிறார். செயல்படுத்தியும்தொழிலாளர்கள் நலனை போற்றும் விதமாக ஆண்டு தோறும் மே - 1 ந் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு மரியாதை செய்து வருவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டும் மே 1 ந் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி அளவில்தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞரின்திருவுருவச் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நினைவுசின்னத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும்தொழிலாளரணி சார்பில் மாவட்டச் செயலாளராகிய என்னுடையதலைமையில் மரியாதை செய்யப்பட இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு,சிவில் சப்ளை உள்ளிட்ட அனைத்து தொ.மு.ச. நிர்வாகிகள், தோழர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழகதோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory