» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுமீன் ஆலைகளை மூடிட வேண்டும் : ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் கோரிக்கை!

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 11:20:05 AM (IST)

பொட்டலூரணி கிராமத்தில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் கழிவுமீன் ஆலைகளை மூடிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே அமைந்துள்ள Jenefa, Marksmen, NPM ஆகிய கழிவுமீன் ஆலைகளின் மூலமாக கச்சா மீன் எண்ணெய் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு அத்தகைய (Crude fish oil) கச்சா மீன் எண்ணெய் பல்வேறு வண்ணப்பூச்சு தொழிற்நிறுவனங்களுக்கும், தோல் தொழில் மற்றும் தோல் பதனிடும் நிறுவனங்களுக்கும், கால்நடை தீவனங்களின் மதிப்பு கூட்டு பயன்பாடுகளுக்கும், பயோ டீசல் மற்றும் சோப்பு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் மொத்தமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் பயன்பாட்டு இரசாயன கலவைகளில் கழிவுமீன் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் கலவை பயன்படுத்தப்படுவதோடு இவ்வாறான இரசாயன கலவைகளில் தவறான உள்ளீடு கச்சா மீன் எண்ணெய் கலவைகளிலும் இரசாயனங்கள் மற்றும் தனிம இரசாயனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான உள்ளீடு இரசாயனங்கள் காற்றிலுள்ள ஆக்ஸிசனில் நேரடியாக கலந்து துர்நாற்றம் ஏற்படுவதாகவும் இத்தகைய கழிவுமீன் இரசாயன கலவைகளால் பல்வேறு நோய்த்தொற்றுகள் உண்டாகிறது.

இத்தகைய கழிவுமீன் ஆலைகளின் மூலமாக வெளிவரும் இரசாயனம் கலந்த காற்றின் மூலமாக கார்டியோ வாஸ்குலர் நோய்கள், புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள்,இரப்பை குடல் கோளாறுகள், சிறுநீரக நோய்கள், கல்லீரல் கோளாறுகள், தோல் நோய்கள், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் சுழற்சி கோளாறுகள், நுரையீரல் அடைப்பு நோய்கள் என பல்வேறு நோய்த்தொற்றுகள உருவாக்கும் கழிவுமீன் ஆலைகளை மூடிட தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory