» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 8:29:11 AM (IST)

ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர. தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா அருகில் சிலர் கஞ்சா விற்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது காமராஜர் பூங்கா அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். 

போலீசாரை பார்த்தவுடன் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் போலீசார் 2 பேரை மடக்கிப்பிடித்தனர். அவர்களது கூட்டாளி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட 2பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஆறுமுகநேரி கமலா நேரு காலணியை சேர்ந்த கோபால் மகன் சஞ்சய் குமார் (21), ஆறுமுகநேரி பாரதிநகர் மேலத்தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் இசக்கி ராஜா என தெரிய வந்தது. மேலும், சஞ்சய்குமார் மீது ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இந்த 2 பேரும் மதுரையில் இருந்து வியாபாரிகளிடம் கஞ்சாவை வாங்கி வந்து, ஆறுமுகநேரி பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 180 கிராம் கஞ்சா மற்றும் கவர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 செல்போன்கள் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் ெசய்யப்பட்டது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து ரிமாண்டுக்கு அனுப்பினர். 

போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய மற்றொரு கஞ்சா வியாபாரி தலைவன் வடலியை சேர்ந்தவர் என்றும், தற்போது ஆறுமுகநேரி கீழநவ்வழடிவிளையில் வசித்து வரும் வேலுச்சாமி மகன் சூர்யா என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் விட்டுச் சென்ற பையில் 180 கிராம் கஞ்சா இருந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சூர்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory