» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 5:41:00 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை இருந்து வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் "கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். 

ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். 

மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். அதிக உடல் வெப்ப நிலையில் மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். குழப்பமான மனநிலையில் சோர்வாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 

கூடாதவைகள்: கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை கோடை காலங்களில் மதியம் 11.00 முதல் 3.30 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். வெயில் காலங்களில் வெறும் கால்களுடன் வெளியே செல்ல வேண்டாம். சிறிய குழந்தைகள் மதிய வேளையில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தலை தவிர்க்க வேண்டும். 

எனவே கோடை காலங்களில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகளால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை தவிர்க்க கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory