» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் கைதி தப்பி ஓட்டம் : தனிப்படை போலீஸ் வலைவீச்சு

வியாழன் 25, ஏப்ரல் 2024 9:05:20 AM (IST)

பாளை., அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை 2 தனிப்படை போலீசார் தேடிவருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகர் ஸ்ரீராமபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் மணிகண்டன் (19). இவர் பணகுடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து மணிகண்டனுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சிறையில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் 3 மணி அளவில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று மணிகண்டன் தெரிவித்ததின் பேரில் போலீசார் அவரை அழைத்து சென்றனர். 

அங்கிருந்து அவர் திடீரென்று தப்பி ஓடிவிட்டார். போலீசார் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லை மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் பல்வேறு இடங்களிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory