» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேலூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

வெள்ளி 29, மார்ச் 2024 12:03:05 PM (IST)

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  மேலூர் ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தம் வழங்குமாறு பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் 1 வது நடைமேடையில் பராமரிப்பு பணிகள் கடந்த 15 நாட்களாக தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் பல்வேறு பணிகள், அதாவது மூன்றாவது நடைமேடை விரிவாக்கம்-சிக்னல், பிட்லைன் விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் லைன்கள் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் வசதியும் கிடையாது. இதனால் பொதுமக்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் ரயில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். 

இதைத் தவிர்க்கும் வித‌மாக, தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில், வண்டி எண் 12694 தூத்துக்குடி- சென்னை  முத்துநகர் அதி விரைவு ரயில்,  வண்டி எண். 16235-16236 தூத்துக்குடி- மைசூர் மற்றும் மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில்களுக்கு,  தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் உடனடியாக நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் கருத்து

BalamuruganMar 31, 2024 - 08:56:14 AM | Posted IP 162.1*****

மழை பெய்து தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை த அறிந்தும் மேலூரில் பயணிகளை இறங்க சொல்லாமல் இரண்டாம் கேட்டில் நடுவழியில் ரயிலை நிறுத்தி பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கவிடுவதுதான் ரயில்வேயின் பொறுப்புணர்வு இதில் ஒரு vvip வந்தால் என்னசெய்வார்களோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory