» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி: நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்

வெள்ளி 29, மார்ச் 2024 8:26:38 AM (IST)

திற்பரப்பில் நண்பர்களுடன் சுற்றுலா வந்த இடத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி தென்காசியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சமுத்திர பாண்டியன். திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய ஒரே மகன் அய்யப்பன் (17). தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதையொட்டி அய்யப்பனும், நண்பர்களும் சுற்றுலா செல்ல தீர்மானித்தனர். அதன்படி ஒரே வகுப்பில் படித்த 18 மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்கினர். பின்னர் நேற்று அங்கிருந்து புறப்பட்டு திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

அருவியில் தற்போது குறைவான அளவு தண்ணீரே பாய்கிறது. ஆனால், அருவியின் அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நண்பர்கள் அனைவரும் குளிப்பதற்காக நீச்சல் குளத்தில் இறங்கினர். அவர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தபோது திடீரென அய்யப்பனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தண்ணீரில் தேடினர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டனர். 

உடனே அவரை மீட்டு களியல் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்ைச அளித்து விட்டு மேல்சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சக மாணவர்கள் கதறி அழுதனர். சுற்றுலா வந்த இடத்தில் பிளஸ்-2 மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

அதுMar 29, 2024 - 08:34:57 PM | Posted IP 172.7*****

ஆலமே இருக்காது. அதில மூல்க வாய்ப்பே இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory